விஜய் கட்டிய கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் !
நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோவில் நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயின் தாயுடன் சாமி தரிசனம் பெற்று சென்றார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-13 09:27 GMT
நடிகர் ராகவா லாரன்ஸ்
சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் தனக்கு சொந்தமான இடத்தில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டு அதற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல் நாள் மாலை நடிகர் விஜய் கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்று சென்றார் மறுநாள் காலை கும்பாபிஷேகம் அன்று நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபனா கலந்து கொண்டனர். இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் விஜயின் தாய் ஷோபனா சாமி தரிசனம் செய்தனர் இந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.