சென்னை விமான நிலையத்தில் இருந்து GOAT இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு சென்ற நடிகர் விஜய் !!!!

Update: 2024-05-11 06:52 GMT

நடிகர் விஜய்

நடிகர் விஜயின் 68 வது படமான கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ் (கோட்) படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம் ,பிரபுதேவா, மோகன் ,பிரசாந்த் ,வைபவ், சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான" விசில் போடு" கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது இதை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம் மற்றும்  நிகழ்ச்சியில் இரண்டாவது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என பட குழு தெரிவித்துள்ளது.

இதனால் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி கேரளா மற்றும் மாஸ்கோவில் படம் பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

மேலும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

சென்னை விமான நிலையத்தில் மாஸ் அணிந்து செல்லும் நடிகர் விஜயை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள்.

Tags:    

Similar News