நடிகர் விமல் நடித்த 'சார்' - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் !!

Update: 2024-10-24 07:00 GMT

சார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நடிகர் விமல் நடித்த 'சார்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்த இப்படத்திற்கு இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்த நடிகர் விமல், இயக்குனர் போஸ் வெங்கட் உள்ளிட்ட படக் குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர்.

பின்னர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினர். இதனையடுத்து நடிகர் விமல் நிருபர்களிடம் கூறியது:- ‘சார்’திரைப்படம் வெற்றிய அடைந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி அடைவது திரைத்துறையை மேலும் ஊக்குவிக்கும் எனவும் ஓடிடி, திரையரங்கு என்பவை வெவ்வேறானவை. இரண்டும் திரைத்துறைக்கு மிகுந்த ஊக்கத்தை வழங்குகிறது. திரையரங்குகள் மூலம் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவுகளை பெற்று கொண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

Tags:    

Similar News