மகனுக்கு பெயர் வைத்து கொண்டாடிய நடிகை அமலாபால் - ரசிகர்கள் வாழ்த்து !!

Update: 2024-06-18 05:24 GMT

நடிகை அமலாபால்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். இவர் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய பின் படங்கள், போட்டோ ஷுட்கள், ஆன்மீக பயணம் என நிறைய மேற்கொண்டு வந்தார்.

கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் அறிவித்தார்.

கர்ப்பமாக இருந்தாலும் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்துவது, பட புரொமோஷனில் கலந்துகொள்வது என பிஸியாகவே இருந்தார். அமலாபாலின் வளைகாப்பு புகைப்படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் கடந்த ஜுன் 11ம் தேதி அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதோடு அவர்களின் மகனுக்கு இலை என்றும் பெயர் வைத்தனர்.

இந்த பெயருக்கு யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியின் பெயர் எனவும். இந்த பெயருக்கு தமிழில் பரலோகம், சொர்க்கம், விண்ணுலகம் என்று அர்த்தம் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News