மலையாள நடிகர் மீது நடிகை பாலியல் புகார் - மீண்டும் கைது !!

Update: 2024-10-23 05:03 GMT

மலையாள நடிகர் முகேஷ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ் மீது நடிகை பாலியல் புகார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் வலம் வருபவர் முகேஷ். பிரபல தமிழ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவன் தான் இவர். தற்போது கொல்லம் தொகுதி சிபிஎம் எம்எல்ஏ பதவியில் உள்ளார்.

இந்த நிலையில் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் நடிகர் முகேஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சியை சேர்ந்த ஒரு நடிகை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து கடந்த மாதம் நடிகர் முகேஷை மரடு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மீண்டும் ஆலுவாவை சேர்ந்த ஒரு நடிகையும் முகேஷுக்கு எதிராக ஒரு பாலியல் புகார் கொடுத்திருந்தார். கடந்த 2011ல் திருச்சூர் அருகே உள்ள வாழானிக்காவு என்ற இடத்தில் வைத்து நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நடிகர் முகேஷை வடக்காஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நடிகர் முகேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

Similar News