நடிகை வரலட்சுமிக்கு விலை உயர்ந்த பரிசு கொடுத்து அசத்திய வருங்கால கணவர் !!!

Update: 2024-05-03 10:07 GMT

வரலட்சுமி

தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமான சரத்குமாரின் மகளான வரலட்சுமி ரசிகர்கள் முக்கியமாக பார்க்கும் நடிகைகளில் ஒருவராக வரலட்சுமி உள்ளார்.

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவிட்டார் வரலட்சுமி.

போல்டான நடிப்பு, படபடவென பேச்சு என அவரது நடிப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இவர் தற்போது தமிழை தாண்டி பல மொழிகளில் நடித்து அசத்தி வருகின்றார்.

Advertisement

வரலட்சுமி வாழ்க்கையில் காதலும் மலர்ந்துள்ளது. நிக்கோலாய் என்பவரை காதலித்து வந்த வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தமும் அவருடன் முடிந்துள்ளது.

இந்த நிலையில் திருமணம் இன்னும் நடக்காத நிலையில் நிக்கோல் வரலட்சுமிக்கு ஒரு விலை உயர்ந்த பரிசு கொடுத்துள்ளார். மும்பையில் வரலட்சுமிக்கு நிக்கோலாய் மொத்தம் இரண்டு பங்களாக்களை பரிசாக வாங்கி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த பங்களாக்களில் சொகுசு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. அதன் விலை பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News