இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் களமிறங்கும் நஸ்ரியா !!

Update: 2024-06-03 05:20 GMT

நஸ்ரியா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் அழமாக பதியக்கூடிய பிரபலங்களில் ஒருவர் நஸ்ரியா.ராஜா ராணி படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நஸ்ரியா நய்யாண்டி, நேரம், வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியா கடைசியாக தெலுங்கில் நானிக்கு ஜோடியாக அண்டே சுந்தரானிகி என்ற படத்திலும் நடித்து இருந்தார். அதன்பிறகு அவர் திரையுலகத்தில் நடிக்கவில்லை.

Advertisement

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். சூட்சும தரிஷிணி என்ற மலையாள படத்தில் நடிக்க தன்னை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது புதுமையான காதல் கதையம்சம் உள்ள படமாக இருக்கும் என்றும் நஸ்ரியா சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். அடுத்து தமிழ் படங்களிலும் நடிப்பார் என்றும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

Tags:    

Similar News