ஒரு பெண்ணை தூக்குவதற்கு மொத்த ஆண் போட்டியாளர்களும் முடிவு - அதே போல் நாமினேஷன் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார் !!

Update: 2024-10-15 05:18 GMT

sowdharya

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிக் பாஸ் 8ம் சீசன் தற்போது இரண்டாவது வாரம் தொடங்கி இருக்கிறது. முதல் வாரத்தில் ரவீந்தர் எலிமினேட் ஆன நிலையில், மீண்டும் ஆண்கள் vs பெண்கள் என தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் ஆண்கள் vs பெண்கள் மாற்றி மாற்றி நாமினேட் செய்யவேண்டும் என பிக்பாஸ் தெரிவித்த நிலையில்,

இந்த வாரம் சவுந்தர்யாவை குறிவைக்க வேண்டும் என மொத்த ஆண் போட்டியாளர்களும் முடிவு எடுத்துள்ளனர். அதன்படி சவுந்தர்யாவுக்கு மட்டும் 7 வாக்குகள் நாமினேஷனில் பதிவானது.

தீபக் மற்றும் ஜாக்குலின் ஆகியோர் நேரடி நாமினேஷனில் பதிவானார்கள். அதன் பின் பிக் பாஸ் மொத்த நாமினேஷன் லிஸ்ட்டை அறிவிக்கும்போது அதில் மொத்தம் 10 போட்டியாளர்கள் பெயர்கள் இருந்தது.

சவுந்தர்யா - 7, ரஞ்சித் - 5, ஜெப்ரி - 3, முத்துகுமரன் - 3, அர்னாவ் - 2, விஷால் -2, தர்ஷா -2, சாச்சனா - 2, தீபக் - நேரடி நாமினேஷன், ஜாக்குலின் - நேரடி நாமினேஷன் என லிஸ்ட்டை தெரிவித்தார்.

Tags:    

Similar News