அல்லு அர்ஜுன் நடிப்பில் ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் புஷ்பா 2 - ரிலிஸ் தேதியில் மாற்றம் !!

Update: 2024-10-25 04:52 GMT

புஷ்பா-2

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து ஹிட் ஆன புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலில் சாதனை படைத்தது.இதனையடுத்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து தற்பொழுது திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.

நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பையும் நல்ல எதிர்பார்ப்பையும் பெற்றது.

இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வசூல் 1000 கோடி ரூபாயை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் இத்திரைப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்த நிலையில் தற்பொழுது திரைப்படம் 1 நாள் முன்னரே அதாவது டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

Tags:    

Similar News