அல்லு அர்ஜுன் களமிறங்கும் புஷ்பா -2 வெளியீடு ஒத்திவைப்பு !

Update: 2024-06-13 09:07 GMT

புஷ்பா -2 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.

நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பா-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. தற்போது படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

புஷ்பா-2 வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் தயாராக உள்ள மற்ற சினிமா படங்கள் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News