அண்ணா சீரியல் நடிகர் 'லப்பர் பந்து' திரைப்படத்தின் நடிகைக்கும் திருமணம் !!!

Update: 2024-10-30 05:30 GMT

திருமணம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலின் கதாநாயகனாக நடித்தவர் சந்தோஷ். குடும்பத்தை மையமாக கொண்ட, காதல் தொடராக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இந்தியில் ஒளிபரப்பான 'துஜ்சே ஹை ராப்தா' என்ற தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலை தொடர்ந்து, சந்தோஷ் 'அண்ணா' என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த தொடரில் இருந்து விலகி படத்தில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சந்தோஷ் தற்போது பிளாக் ஷீப் வீடியோஸ், கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமான நடிகை மௌனிகாவை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

சமீபத்தில், வெளியான 'லப்பர் பந்து' படத்திலும் முக்கிய நடிகையாக நடித்துள்ளார் மௌனிகா. இந்நிலையில், பெற்றோர் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது, இவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Tags:    

Similar News