சூர்யா 45 படத்திலிருந்து விலகிய ஏ.ஆர். ரஹ்மான் - இது தான் காரணமா ???

Update: 2024-12-09 06:38 GMT

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா, புதிதாக கமிட் செய்திருக்கும் படம் சூர்யா 45. நடிப்பு மற்றும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இப்படம் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து, படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் த்ரிஷா, லப்பர் பந்து கதாநாயகி ஸ்வாசிகா, காளி வெங்கட், காஷ்மீரா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

ரஹ்மான் - ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.கே. விஷ்ணு கமிட் ஆகி உள்ளார். அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

தற்போது வெளிவந்த அறிவிப்பு போஸ்டரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதற்கு முன் வந்த அனைத்து போஸ்டர்களிலும் ரஹ்மானின் பெயர் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என சொல்லப்படுகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தன் மனைவியுடன் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக தகவல் வெளிவந்த நிலையில், சினிமாவிலிருந்து ஓராண்டு ஓய்வு எடுக்கப்போவதாக தகவல் வெளியானது.

அந்த காரணத்தினால் தற்போது இப்படத்திலிருந்து விலகி இருக்கிறாரா? அல்லது படக்குழுவுடன் வேறு ஏதேனும் பிரச்சனையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சூர்யா 45 படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வெளிவரவில்லை.

Tags:    

Similar News