கோட் அடுத்த அப்டேட்-டை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி !!

Update: 2024-07-29 08:24 GMT

கோட்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

GOAT ரிலீஸில் மாற்றம் ஏற்படும் என வதந்திகள் எழுந்து வந்த நிலையில், படம் செப்டம்பர் 5, 2024 அன்று வெளியிட உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Advertisement

படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், படம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 5இல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, GOAT முடிக்கப்படாத VFX வேலை காரணமாக ரிலீஸில் தாமதத்தை சந்திக்க நேரிடும் என்று சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அனைத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கோட் படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News