மலையாள சினிமாவில் கால் பதிக்கும் அர்ஜுன் தாஸ்!

Update: 2024-02-15 09:34 GMT

 அர்ஜுன் தாஸ்!

அர்ஜுன் தாஸ் அடுத்து மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் அர்ஜுன் தாஸ், அடுத்து ஒரு புதிய மலையாள படத்தில் நடிக்க உள்ளார். கோலிவுட் திரையுலகில் முக்கிய ஹீரோவாகவும், வளர்ந்து வரும் ஹீரோவாகவும் இருப்பவர், அர்ஜுன் தாஸ். கைதி படத்தில் வில்லனாக நடித்து ‘லைஃப் டைம் செட்டில்மண்ட்’ டைலாக் பேசிய இவர், அந்த படம் வெளியானதை அடுத்து இவருக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ட்ட பொம்மா, அந்தாகாரம், அநீதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார்.

நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம் மூலமாக, மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார்.அகமது கபீரின் 'ஜூன்', 'மதுரம்' மற்றும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ் வெப் சீரிஸ்' என, அனைத்து படைப்புகளும் பெரும் வெற்றியைக் குவித்துள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ஹிருதயம்', குஷி, & ஹாய் நானா ஆகிய படங்களில் மாயாஜால இசைக்கு சொந்தக்காரரான ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Tags:    

Similar News