சிவகார்த்திகேயனுடன் இணையும் அருண் விஜய் !

Update: 2024-04-04 10:39 GMT

சிவகார்த்திகேயன் - அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரின் 36 வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அருண் விஜய் அடுத்த படம் நடிக்கவிருக்கிறார். மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார்.

இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய இயக்குனர் திருக்குமரன் " எப்படி சிவகார்த்திகேயனுக்கு மான் கராத்தே ஒரு திருப்பு முனை படமாக அமையும்" எனக் கூறியுள்ளார்.

Tags:    

Similar News