ஆர்யா சந்தானம் இணைந்து நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகத்துக்கான பணிகள் தொடக்கம் !!
By : King 24x7 Angel
Update: 2025-01-20 08:40 GMT
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தின் அடுத்த பாகத்தையும் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் சந்தனத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். கதாநாயகியாக மீனாக்ஷி சவுத்ரி நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சந்தானம், ஆர்யா, கவுதம் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து நெக்ஸ்ட் லெவலுக்கு நாங்கள் ரெடி என தங்களது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.