கமல்ஹாசனின் ரீமேக் திரைப்படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் !
Update: 2024-03-28 09:07 GMT
கமல்ஹாசன் - அசோக் செல்வன்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1988ல் வெளிவந்த சத்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
இளையராஜா இசையில், இப்படத்தில் இடம் பெற்ற வலையோசை என்ற பாடல் கிளாசிக் பாடல்களின் வரிசையில் நல்ல வரவேற்பை பெற்றது.
அண்ணாமலை , பாட்சா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படம் இந்த சத்யா தான்.
1985-ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த அர்ஜுன் என்ற திரைப்படத்தின் ரீமேக் படம் தான் இந்த சத்யா.
கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமான சத்யா தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும், போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.