அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் களமிறங்கிய லப்பர் பந்து படத்தின் 4 - நாள் வசூல் வேட்டை !!
By : King 24x7 Angel
Update: 2024-09-24 04:58 GMT
லப்பர் பந்து
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான லப்பர் பந்து. இப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் 4 நாள் வசூல் விவரத்தை பார்ப்போம்.
ரப்பர் பந்து, 15 ரூபாய்க்கு விற்கும்போது தொடங்கும் கதை, 55 ரூபாய்க்கு விற்கும்போது முடிகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் உணர்ச்சிமிகு சம்பவங்களின் அற்புதமான கதையாக ரப்பர் பந்து அமைந்துள்ளது.
கதையும் அழுத்தமாக இருக்க ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் இந்த படத்தின் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தற்போது இப்படம் 4 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 6 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக தெரிகிறது.