தாய்மை அடைவது என்னுடைய கனவு - நடிகை சமந்தா !!
தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தாவுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
தற்போது அவர் படங்களில் பிசியாக நடித்து வருகிற நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், ”எனக்கு தாயாக இருக்க வேண்டும் என்பது கனவு. அந்த உணர்வை பெற வேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.
நான் இப்படி சொன்னதும் எல்லோரும் எனது வயதை பற்றி பேசுவார்கள். ஆனால் தாயாவதற்கு வயது தடையாக இருக்கும் என்று நான் யோசிக்கவில்லை. சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடரில் குழந்தைகளுடன் சேர்ந்து நடித்தேன்.
அது சிறந்த உணர்வாக இருந்தது. எனது உடல் நலம் நன்றாக உள்ளது. வாழும் ஒவ்வொரு நாளையும் எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்' என்று கூறினார்.