பிக் பாஸ் ஷோ 8வது சீசனில் பிரபல காமெடி நடிகர் பங்கேற்பதாக தகவல் - யார் தெரியுமா ???

Update: 2024-09-20 05:04 GMT

பிக் பாஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிக் பாஸ் ஷோவின் 8வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சின்னத்திரை நடிகர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் என பல பிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த முறை விஜய் சேதுபதி தொகுப்பாளராக இணைந்து இருப்பதால் ஷோ எப்படி இருக்க போகிறது என்று மக்கள் ஆவலாக இருகின்றனர்.

வழக்கமாக பிக் பாஸ் என்றால் இளம் வயது மற்றும் வயதானவர்கள் வரை பல பிரபலங்கள் போட்டியாளர்களாக வருவார்கள். அந்த விதத்தில் காமெடி நடிகர் செந்தில் போட்டியாளராக வர போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. 


அவர் வத்தால் பிக் பாஸில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். செந்தில் பிக் பாஸ் வருவாரா இல்லையா என்பதை ஷோ தொடங்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News