‘கங்குவா’ திரைப்படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுஃபின் மரணம் - அதிர்ச்சியில் சினியுலகம் !!
‘கங்குவா’ எடிட்டர் நிஷாத் யூசுஃபின் இன்று மரணம் அடைந்த நிலையில் சினியுலகம் அதிர்ச்சியில் உள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார்.
இவர் எடிட்டராக பணிபுரிந்துள்ள பெரிய படம் என்றால் அது ‘கங்குவா’ தான். அப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளிவர இருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே நிஷாத் யூசுஃப்புக்கு மரணம் ஏற்பட்டுள்ளது.
இவர் கொச்சி பனம்பில்லி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (அக்.30) அதிகாலை 2 மணிக்கு காலமாகி உள்ளார். எப்படி மரணம் ஏற்பட்டது உள்ளிட்ட விவரங்கள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நிஷாத் யூசுப் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
நிஷாத் யூசுஃப் தற்போது தயாராகி வரும் மோகன்லால் மற்றும் மம்முட்டி படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். 2022-ம் ஆண்டு‘தள்ளுமாலா’ படத்துக்காக கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதினை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கங்குவா’ படத்துக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 45’ படத்துக்கும் எடிட்டராக நிஷாந்த் யூசுஃப் தான் பணிபுரிய இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.