தனுஷ் - ஐஸ்வர்யாரஜினிகாந்த் அளித்த மியூச்சுவல் விவாகரத்து மனு !!!
Update: 2024-04-08 10:47 GMT
தனுஷ் - ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்த நிலையில் திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரி இருவரும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதைதொடர்ந்து, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.