இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நலக்குறைவால் காலமானார் !!

Update: 2024-11-16 05:15 GMT

இயக்குநர் சுரேஷ் சங்கையா 

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நலக்குறைவால் காலமானார்.

ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா. இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரேம்ஜி நடிப்பில் அவர் இயக்கிய சத்திய சோதனை படமும் வித்தியாசமான கதைக்களமாகவே இருந்தது.

ஆனால் சத்திய சோதனைக்குப் பிறகு அவர் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால் இன்னும் வெளியாகவில்லை. அதில் ஒரு படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிதுள்ளராம்.

Advertisement

இந்நிலையில் கல்லீரல் பாதிப்பு தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சங்கையா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கோவில்பட்டியை சேர்ந்த சுரேஷ் சங்கையாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது யோகி பாபு நடிப்பில் 'கெனத்த காணோம்' என்ற புதிய படத்தை சுரேஷ் சங்கையா இயக்கி வந்தார். இப்படம் விரைவில் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News