ஸ்டார் திரைப்படத்தின் 3- நாள் வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா !!!

Update: 2024-05-13 06:24 GMT

ஸ்டார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் கவின். சின்னத்திரைலிருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

கவின் ரசிகர்களால் இன்று கவனிக்கப்படும் ஹீரோவாக மாறி இருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டாடா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஸ்டார் என்னும் திரைப்படத்தை கொடுத்துள்ளார். இளம் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

Advertisement

கடந்த 10 ஆம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. உலக அளவில் ஸ்டார் திரைப்படத்தை ரசிகர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த நிலையில் இப்படம் வெளிவந்த மூன்று நாட்களில் நிறைவு செய்துள்ள நிலையில் வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஸ்டார் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்களில் ரூபாய் 12 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூபாய் பத்து கோடி வரை வசூல் செய்துள்ளது என குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News