நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரிக் கொடுக்கும் நடிகை சந்திரா எந்த சீரியல் தெரியுமா?
Update: 2024-05-15 07:03 GMT
விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலின் பாடல் என்றால் அது காதலிக்க நேரமில்லை தொடர் பாடல்தான் சந்திரா மற்றும் பிரஜன் முக்கிய வேடத்தில் நடித்த இந்த தொடர் பாடல் ஹிட்டு ஆனது.
இந்த தொடர் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சந்திரா இந்த நிலையில் 38 வயதாகும் இவர் சக நடிகரான டோஸ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில் சந்திரா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சின்னத்திரை பக்கம் வருகிறார். சன் டிவி தொலைக்காட்சியில் படு ஹிட் ஆக ஒளிபரப்பாகும் கயல் தொடரின் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் என்ன கதாபாத்திரம் என்ற மற்ற விவரங்கள் பற்றி எதுவும் வெளியாகவில்லை.