தவேக தலைவர் விஜய் பெயரை குறிப்பிடாமல் கங்குவா பட நிகழ்ச்சியில் சூர்யா விமர்சனம் !!

Update: 2024-10-28 05:06 GMT
தவேக தலைவர் விஜய் பெயரை குறிப்பிடாமல் கங்குவா பட நிகழ்ச்சியில் சூர்யா விமர்சனம் !!

விஜய்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சூர்யா களமிறங்கிய 3டி படம், ‘கங்குவா’இதனை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் , பாபி தியோல், திஷா பதானி, கருணாஸ், யோகி பாபு, நட்டி, போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளமாக அவருக்கு கிடைக்கிறது. இருப்பினும் அதை உதறிவிட்டு தற்போது அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார்.

விஜய்யின் அரசியல் என்ட்ரி பற்றி பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.

கங்குவா படத்தின் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா விஜய் பெயரை குறிப்பிடாமல் பேசி உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியர், அவரை பாஸ் என்று தான் எப்போதும் அழைப்பேன். தற்போது துணை முதலமைச்சர் ஆகிவிட்டார்.

லயோலாவில் இன்னொரு நண்பர் ஒருவர் புதிய பாதை போட்டு புதிய பயணத்திற்காக வருகிறார், அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும் என விஜய் பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து சொல்லி இருக்கிறார் சூர்யா.

Tags:    

Similar News