பிரபல காமெடி நடிகர் செந்தில் பண விஷயத்தில் வீக் என்று ஓபன் ஆக பேசிய மனைவி !!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் என்று சொன்னதும் முதலில் ஞாபகம் வருவது கவுண்டமணி- செந்தில். இவர்களுக்கு அடுத்த நிறைய பிரபலங்களின் பெயர் இடம் பெற்றாலும் எப்போதும் இவர்கள் டாப் தான்.
கவுண்டமணி அவ்வளவாக இப்போதெல்லாம் படங்கள் நடிப்பதில்லை ஆனால் அவ்வப்போது செந்தில் நடித்து வருகிறார். ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் சிறிய ரோலில் தோன்றியவர் செந்தில் அதன் பிறகு டாப் கியரில் சென்ற அவர் சினிமா பயணம் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
இப்போது மீண்டும் ரீ என்ரி கொடுத்து வருகிறார். அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் செந்தில் மனைவி பேசும் போது எனது கணவர் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அவர் பணம் விஷயத்தில் கொஞ்சம் வீக் தான். சொல்லப்போனால் அவருக்கு பணத்தை கூட என்ன தெரியாது. அனைத்தையும் நான் தான் பார்த்துக் கொள்வேன் என கூறி இருந்தார்.
அவர் திருமணம் முடிந்ததும் அவரது அப்பா என்னிடம் அவன் பண விஷயத்தில் வீக் அதனால் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அதிலிருந்து சம்பளம் மற்றும் வருமானம் என அனைத்தையும் நான்தான் கவனித்துக் கொள்கிறேன்.
ஆனால் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால் மட்டும் சம்பளத்தில் பாதியை எடுத்துக் கொண்டு மீதியை என்னிடம் கொடுப்பார் என்று பேசியுள்ளார்.