நடிகை சமந்தா உடல் எடை பற்றி ரசிகர்கள் கருத்து - அடுத்தவர்களை வாழவிடுங்கள் பதிலடி கொடுத்த சமந்தா !!

Update: 2024-11-06 05:17 GMT

சமந்தா

தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என இந்திய அளவில் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை சமந்தா.தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், சமீபத்தில் பாலிவுட்டில் ‘சிட்டாடல் ஹனி பனி’என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் சமந்தாவிடம் உங்கள் உடல் எடையை கொஞ்சம் கூட்டுங்கள் மேடம் என்று கூறினார் அதற்கு சமந்தா பதிலடி கொடுத்திருக்கிறார்.

"மீண்டும் மீண்டும் எனது எடை குறித்து கேள்வி எழுப்புகின்றனர். எனது உடல் எடை எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்.உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். நான் ஒரு கடுமையான strict anti-inflammatory diet-ஐ பின்பற்றி வருகிறேன். இது எனது உடலுக்கு தேவை. இதுதான் எனது உடலை அதிக எடையிலிருந்து தடுத்து, எனது உடல் நலனுக்கு (myositis) ஏற்றவாறு சரியான அளவில் என்னை வைத்திருக்க உதவுகிறது.

தயவு செய்து மற்றவர்கள் பற்றி மதிப்பிடுவதை நிறுத்துங்கள். அடுத்தவர்களை வாழவிடுங்கள்'' என்று காட்டமாக கூறினார்.

Tags:    

Similar News