கங்குவா படத்தொகுப்பாளர் மரணம் - சினிமா பிரபலங்கள் இரங்கல் !!

Update: 2024-11-14 07:36 GMT
கங்குவா படத்தொகுப்பாளர் மரணம் - சினிமா பிரபலங்கள் இரங்கல் !!

உதய சங்கர்

  • whatsapp icon

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கங்குவா இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. தற்போது படத்தொகுப்பாளர் மரணமடைந்துள்ளார். அவர் பெயர் உதய சங்கர். இவர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான செம்பருத்தி படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பேமஸ் ஆனார். தமிழ் சினிமாவில் 46 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தொகுப்பாளர் உதய சங்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்து இருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை காலை 10 மணிக்கு சேலம் அருகே உள்ள அவர் சொந்த ஊரில் அவரது உடஅடக்கம் செய்யப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கங்குவா படத்தொகுப்பாளராக நிஷாத் யூசுப் பணியாற்றி இருந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் உள்ள ஓட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் நிஷாத் யூசுப் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவர் இறந்த சில தினங்களில் உதய சங்கர் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News