அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !!
By : King 24x7 Angel
Update: 2024-12-12 05:10 GMT

Cm Stalin & Rajinikanth
அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து பதிவில், எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.