சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோ வெற்றி வசந்த் வைஷ்ணவி திருமணம் தகவல் !!
By : King 24x7 Angel
Update: 2024-11-23 06:42 GMT

வெற்றி வசந்த் வைஷ்ணவி
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக முத்து காதபாத்திரங்களில் நடித்து அசத்தி வருபவர் நடிகர் வெற்றி வசந்த்.
தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியில் இந்த சீரியல் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதற்கு வெற்றி வசந்த் நடிப்பும் ஒரு முக்கிய காரணம் தான்.
வெற்றி வசந்த் சமீபத்தில் சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும் அவர்கள் காதலித்து வந்த நிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தபோது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி திருமணம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நவம்பர் 28ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது.