தமிழ்நாட்டில் நான்கு நாட்களில் ராயன் படத்தின் வசூல் சாதனை !!

Update: 2024-07-30 09:48 GMT

ராயன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ். அவர் இயக்கி, நடித்த அவரது 50 வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக ராயன் படத்தில் தனுஷ் பக்காவாக தெரிகிறார் என்பது ரசிகர்களின் பாராட்டாக உள்ளது.

உலகளவில் ராயன் திரைப்படம் இதுவரை ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படத்திற்கு கிடைக்காத மாபெரும் வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது என திரை வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.நான்கே நாட்களில் உலகளவில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடியை ராயன் கடந்துவிடும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராயன் படம் நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

Tags:    

Similar News