இன்ஸ்டாகிராமில் தகாத வீடியோக்கள் - அனிதா சம்பத் புகார் !!
By : King 24x7 Angel
Update: 2024-12-02 09:34 GMT
அனிதா சம்பத்
செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் அனிதா சம்பத்.
அவர் பிக் பாஸுக்கு பிறகு படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். தற்போது புது சீரியல்களில் களமிறங்கி உள்ளார். மேலும் youtube சேனல் நடத்தி வரும் அவர் ட்ராவல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் குரூப் டூர் ஏற்பாடு செய்யும் பணிகளையும் அவர் செய்து வருகிறார். அனிதா சம்பத்துக்கு இன்ஸ்டாகிராமில் நபர் ஒருவர் தகாத வீடியோக்களை chatல் அனுப்பி உள்ளார் என அவரது புகைப்படத்தை வெளியிட்டு அனிதா சம்பத் புகார் அளித்து இருக்கிறார்.