ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து - சமரச தீர்வு மையத்தில் அமர்ந்து பேச நீதிமன்றம் உத்தரவு !!!

Update: 2024-11-28 05:22 GMT

Jayam Ravi - Aarthi Divorce

தமிழ் சினிமா துறையில் பிரபலங்களில் விவாகரத்து என்பது சாதாரணமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தனுஷ் - ஐஸ்வர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் - சாயிரா, ஜெயம் ரவி - ஆர்த்தி என தொடர்ந்து பல முன்னணி பிரபலங்கள் விவாகரத்து அறிவித்தது ரசிகர்களுக்கு கடும் ஷாக் கொடுத்து வருகின்றனர்.

ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதை அவரே அறிக்கையிலும் தெரிவித்திருந்தார்.

நேற்று நடந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்காக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் ஆஜர் ஆனார்கள். அவர்கள் இருவரும் சமரச தீர்வு மையத்தில் அமர்ந்து பேச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதை ஏற்று அவர்கள் இருவரும் சமரச தீர்வு மையத்திற்கு சென்று உள்ளனர். 

Tags:    

Similar News