நாங்கள் பிரிந்துவிட்டோம் என்ற விவகாரத்தை பகிர்ந்த ஜீவி பிரகாஷ் !!!

Update: 2024-05-14 06:45 GMT

ஜீவி பிரகாஷ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிரபல இசையமைப்பாளரும் ,நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமான தகவலை அறிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த 26 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளர்ந்து கொண்டிருக்கிறார்.

நாங்கள் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டோம் என்ற ஜீவி பிரகாஷ் சைந்தவி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக பரவி வந்த வதந்தை உண்மையாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஜீவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் 11 ஆண்டு காலமான வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவும் எங்களுடைய தனிப்பட்ட இந்த முடிவுக்கு ஊடகங்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மதிப்பளித்து எங்களுக்கு உங்கள் புரிதல் மற்றும் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று ஜிவி பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News