மீண்டும் ரியோ ராஜ்-வுடன் இணையும் ஜோ பட நடிகை !!!

Update: 2024-05-04 05:20 GMT

ஜோ ஜோடி 

2023 ஆம் ஆண்டு இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இது தொடர்ந்து ஜோ பட ஜோடிகள் அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்க உள்ளார். இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது அமைந்திருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இயக்குனர்கள் ஹரி முத்தையா ஆகியோரை வைத்து பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் நிறுவனம் சார்பாக அறிமுக இயக்குனர் பிளாக் ஷீப் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.

பிளாக் ஷீப் நிறுவனத்தின் இனி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் ஜோ திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்து குமார் இசை, கே .ஜி. யின் எடிட்டிங் ,வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சி ஆடை வடிவமைப்பு என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் உருவாக உள்ளது.

இந்த வருட பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் விமர்சையாக நடைபெற்றது.

Tags:    

Similar News