சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு தகவல் !!!
By : King 24x7 Angel
Update: 2024-05-24 07:13 GMT
கலகலப்பு
இயக்குனர் சுந்தர் சி இயக்கி நடித்த சமீபத்தில் வெளியான படம் அரண்மனை இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
கடந்த மே மூன்றாம் தேதி ரிலீசான அரண்மனை 4 இதுவரை உலக அளவில் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி அடுத்த படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வழியாக பெரும் வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த படத்தில் சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கலகலப்பு மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கும் என தெரிவித்துள்ளது.