3 வேடத்தில் களமிறங்கும் கமல் - தக் லைப் திரைப்படத்தின் அப்டேட்ஸ் !
Update: 2024-03-22 17:05 GMT
தக் லைப்
பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.
இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, ஜெயம் ரவி, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .
இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் கமல் இல்லாத காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.
மேலும் இப்டத்தில் கமல் மூன்று வேடத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.