பிக்பாஸ் -ல் இருந்து விலகிய கமல் - சீசன் 8 தொகுப்பாளராக என்ட்ரி யார் ???

Update: 2024-08-07 11:30 GMT

கமல் 

உலகளவில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.பிக் பாஸ் தமிழில் இதுவரை 7 சீசன்கள் நிறைவடைந்து இருக்கிறது. அனைத்தையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். இதனை அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இதனால், பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான கமல்ஹாசனின் கருத்துகள் மேல் ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது.

Advertisement

தற்போது, அவர் விலகியதால், அடுத்த பிக்பாஸ் சீசன் தொகுப்பாளர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக நடிகை நயன்தாரா உடன் பேச்சுவார்த்தையில் பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி வெறும் வதந்தி தானா அல்லது அவர் பிக் பாஸ் தொகுத்து வழங்க நயன்தாரா வருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்கு முன்பு, நடிகர் கமல்ஹாசன் ஓய்விலிருந்தபோது சில வாரங்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோர் தொகுப்பாளராகக் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News