8 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான கங்குவா !!

Update: 2024-11-14 04:57 GMT

கங்குவா

தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா திரைப்படமாக மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள சூர்யாவின் “கங்குவா” திரைப்படம் இன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் சூர்யா படம் கங்குவா சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் பாலிவுட் பிரபலங்கள் பாபி தியோல் மற்றும் திஷா படானி முன்னனி நட்சத்திரங்கள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு என மொத்தம் 8 மொழிகளில், உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் இந்தப் படம் ரீலிஸ் ஆகி உள்ளது. கங்குவா படம் முன்பதிவில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூலை மிரளவைத்து வருகிறது.

கேரளா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலங்களில், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் கங்குவா படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

படத்தின் முதல் நாள் ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில், “US-ல் படம் பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றிப் படம்னு நல்ல விமர்சனங்களை கூறியுள்ளார்.

Tags:    

Similar News