திரையிடப்படும் கண்மனி அன்போடு காதல் பாடல் - ரீரிலீஸ் ஆகும் குணா திரைப்படம் !

Update: 2024-11-26 12:20 GMT

குணா திரைப்படம்

1991 ஆம் ஆண்டில் சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன், ரேகா மற்றும் ரோஷினி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது குணா திரைப்படம்.

இப்படம் தமிழ்நாட்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. இப்படத்தின் குகை காட்சிகள் கொடைக்கானலில் திரையிடப்பட்டது.

இப்படத்தின் மூலம் கொடைக்கானலில் உள்ள சாத்தானின் சமையலறை என அழைக்கப்பட்ட குகை படம் வெளியானதிற்கு பின் குணா குகை என அழைக்கப்பட்டது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

Advertisement

படத்தில் இடம்பெற்ற கண்மனி அன்போடு காதல் பாடல் இன்றுவரையிலும் மக்களால் கொண்டாடும் பாடலாக இருக்கிறது.

இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் நாட்டில் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதல் பாடல் மிக பெரியளவில் ஹிட்டானது.

இந்நிலையில் 33 ஆண்டுகளுக்கு பிறகு குணா திரைப்படம் மீண்டும் ரிலீசாகவுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக படத்தின் சிறப்பு டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News