கார்த்தி - அரவிந்த் சாமி இணைந்து நடித்த மெய்யழகன் திரைப்படத்தின் 3 - நாள் வசூல் வேட்டை !!

Update: 2024-09-30 05:04 GMT

 மெய்யழகன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்த திரைப்படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதி - திரிஷா காம்போ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார்.

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் தான் மெய்யழகன்.

இப்படத்தில் கார்த்தி - அரவிந்த் சாமி இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மனித உணர்வுகளை குறித்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பலர் நல்ல விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் இப்படத்திற்கு நெகேட்டிவ் விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், 3 நாட்களை கடந்துள்ள மெய்யழகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News