கீர்த்திசுரேஷ்க்கு திருமணம் இன்று நடந்துமுடிந்தது, திருமணத்துக்கு வருகை தந்த விஜய் !

Update: 2024-12-12 12:05 GMT
கீர்த்திசுரேஷ்க்கு திருமணம் இன்று நடந்துமுடிந்தது, திருமணத்துக்கு வருகை தந்த விஜய் !

கீர்த்திசுரேஷ் திருமணம் 

  • whatsapp icon

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டில் என்பவரை தான் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய உள்ளார். இந்த ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் கோவாவில் களைகட்டி உள்ளன. கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொள்ள ஏராளமான பிரபலங்கள் கோவாவுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.



அந்த வகையில் நடிகர் விஜய்யும் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொள்ள கோவா சென்றுள்ளார். அங்கு மாப்பிள்ளை போல் ஜம்முனு பட்டு வேட்டி சட்டை அணிந்துகொண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 50 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே என வியந்து பார்த்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படத்தைவிட அதில் கலந்துகொள்ள சென்ற விஜய்யின் புகைப்படம் தான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.



 


Tags:    

Similar News