பழம்பெரும் நடிகையான சி.ஐ.டி சகுந்தலா மண்ணுலகைவிட்டு பிரிந்தார் !!

Update: 2024-09-18 06:05 GMT
பழம்பெரும் நடிகையான சி.ஐ.டி சகுந்தலா மண்ணுலகைவிட்டு பிரிந்தார் !!

 சி.ஐ.டி. சகுந்தலா

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84. இவர் பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி சி.ஐ.டி. சகுந்தலா மரணம் அடைந்தார்.

சேலத்தை சேர்ந்த சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார். 1960-ம் ஆண்டு 'கைதி கண்ணாயிரம்' என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர்.

பழம் பெரும் நடிகையான சகுந்தலா மறைவிற்கு பிரபல நடிகர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News