லவ்வர் படத்தின் திரைவிமர்சனம்!

Update: 2024-02-14 09:54 GMT

லவ்வர் படம் 

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மணிகண்டன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் லவ்வர். பிரபு ராம் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கௌரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குட் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் வெளிவரவிருக்கும் லவ்வர் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அளவுகடந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

லவ்வர் படத்தின் விமர்சனம் ;

இத்திரைப்படத்தை பார்த்தவர்கள், தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அதன்படி, லவ்வர் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

மணிகண்டன் - கௌரி பிரியா இருவரும் பொருத்தமான கதாபாத்திரத்தில் பக்காவாக நடித்துள்ளனர். Possessive-வான ஒரு காதலராக சிறப்பாக நடித்துள்ளார் மணிகண்டன். மேலும் கண்ணா ரவி உள்பட மற்றவர்களின் நடிப்பும் நன்றாக இருந்தது.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய மாடர்ன் லவ் காலகட்ட திரைப்படம் லவ்வர்.

லவ்வர் திரைப்படத்தை 'வின்னர்' என குறிப்பிட்டு 3.5/5 மதிப்பெண் அளித்து பலரும் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News