லப்பர் பந்து திரைப்படத்தின் வசூல் வேட்டை !!

Update: 2024-10-05 06:16 GMT

லப்பர் பந்து


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி ரிலிஸ் ஆன திரைப்படம் லப்பர் பந்து. கிரிக்கெட் என்றாலே ரசிகர்கள் அனைவரும் கொண்டாடுவார்கள், அதனை மையப்படுத்தி ஒரு படம் என்றால் பார்க்காமலா இருப்பார்கள்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் முக்கிய நாயகர்களாக நடிக்க சஞ்சனா, சுவாசிகா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். படக்குழுவினர் விஜயகாந்த் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி பின் பாரதிராஜா, இளையராஜா ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

படம் வெளியாகி 15 நாட்கள் ஆகின்ற நிலையில் ,15 நாள் முடிவில் படம் ரூ. 27 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பட ரிலீஸிற்கு பிறகு சில படங்கள் ரிலீஸ் ஆனாலும் பாக்ஸ் ஆபிஸிற்கு எந்த குறையும் இல்லை அந்த அளவுக்கு வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

Tags:    

Similar News