ரஜினிகாந்த் களம் காணும் வேட்டையன் - படத்துக்கு தடை கோரிய மதுரை ஐகோர்ட் !!

Update: 2024-10-03 04:52 GMT
ரஜினிகாந்த் களம் காணும் வேட்டையன் - படத்துக்கு தடை கோரிய மதுரை ஐகோர்ட் !!

வேட்டையன்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ரஜினிகாந்த் நடித்த இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் எடுத்து முடித்துள்ள படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த நிலையில், 'வேட்டையன்' படத்திற்கு என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்றே விசாரணைக்கு வர உள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை சேர்ந்த பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

Tags:    

Similar News