மணிமேகலை vs பிரியங்கா சர்ச்சை ; குக் வித் கோமாளி ஷோவில் மணிமேகலை வன்மத்தின் ப்ரோமோவை வெளியீட்ட நெட்டிசன்கள் !!

Update: 2024-09-26 05:18 GMT

Vijay TV

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விஜய் டிவி குக் வித் கோமாளி 5 ஷோவில் இருந்து மணிமேகலை சமீபத்தில் வெளியேறினார். அதற்கு காரணம் பிரியங்கா தான் என குற்றம்சாட்டி இருந்தார்.

இது மிகப்பெரிய சர்ச்சையாக பரவிய நிலையில், பிரியங்காவுக்கு ஆதரவாக அவருக்கு நெருக்கமான பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். மாகாபா ஆனந்த் தொடங்கி புகழ் வரை ப்ரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்தனர்..

அவர்களை சொம்பு என குறிப்பிட்டு மணிமேகலை பதிலடி கொடுத்தார். அதற்கு செருப்பு போட்டோவை பதிலடியாக பதிவிட்டார் மாகாபா ஆனந்த். இப்படி நாளுக்கு நாள் மணிமேகலை vs பிரியங்கா சர்ச்சை சென்று கொண்டிருக்கிறது.

Advertisement

இந்நிலையில் இந்த வார எபிசோடின் ப்ரொமோ வெளியாகிய நிலையில் அதில் மணிமேகலை போல புகழ் மற்றும் பிரியங்கா போல ராமர் ஆகியோர் பேசி, அந்த சம்பவத்தை கலாய்ப்பது போல பேசி இருக்கின்றனர். இதை விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டு உள்ளது.

மணிமேகலை மீது இருக்கும் வன்மத்தை இப்படி காட்டி இருக்கிறார்கள் என CWC நடத்தும் நிறுவனம் மற்றும் விஜய் டிவியை நெட்டிசன்கள் வெளியீட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News