ஆன்ட்ரியா ஜெர்மியா களமிறங்கும் மனுசி டிரைலர் !!

Update: 2024-04-18 11:16 GMT

மனுசி

இந்த படத்தில் ஆன்ட்ரியா ஜெர்மியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் "மனுசி" என்ற தலைப்பில் இயக்கியுள்ளார். இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார்.

இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

Advertisement

இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் நாசர், தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைகளமாக அமைத்துள்ளது என டிரைலரில் தெரிகிறது.

Tags:    

Similar News