அநாகரிகமாக பேசிய மிஸ்கின் : நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டக்காரா - அருள்தாஸ் பதிலடி !!

மிஸ்கின்
மேடையில் அநாகரிகமாக பேசிய மிஸ்கின் அருள்தாஸ் கண்டனம் :
சில நாட்களுக்கு முன்பு நடந்த 'பாட்டில் ராதா' என்ற படத்தின் விழாவில் அவர் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மதுவின் தீங்கை பற்றி உருவான படத்தின் விழாவில் சினிமாவில் நான்தான் அதிகமாக குடித்தவன், குடித்துக் கொண்டிருப்பவன், இன்னும் குடிப்பவன் என்று பேசியதோடு. குடிப்பவர்களை அவமரியாதை செய்யாதீர்கள் என்றும் கூறினார். மேலும் பட விழாவில் ஆபாச வார்த்தைகளையும் பேசினார். இதற்கு மேடையில் இருந்தவர்களும், எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக சிரித்திக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், 2k லவ் ஸ்டோரி படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகர் அருள்தாஸ் பேசும் போது, என்னுடைய பொருளாதாரம் ரொம்பவும் பின்தங்கி இருந்தது, சுசீந்திரன் அவர்களால் தான் மேலேறி வந்தேன். சமீபமாக இந்த மேடை அநாகரிகமான மேடையாக மாறிவிட்டது.
இதில் "சமீபத்தில் பாட்டில் ராதா படத்தின் விழா மேடையில் இயக்குநர் மிஸ்கின் பேசியது மிகவும் வல்கரா இருந்தது. இயக்குநர் என்றால் எது வேண்டுமானலும் பேசலாம் என்பது இல்லை. அந்த வீடியோவை பார்த்தேன், அவர் பேசியது நமக்கு தலைகுனிவாக இருந்தது. இந்திய சினிமாவில், தமிழ் சினிமா மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கிறது.
இயக்குநர்கள் மட்டுமல்ல, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் இந்திய அளவில் மதிக்கக்கூடிய இடங்களில் உள்ளனர். அதுவும் இந்த மேடை, பிரசாத் லேப் மேடை பல ஜாம்பவான்களை பார்த்த மேடை. இந்திய முழுவதும் உள்ள பலரும் இந்த மேடையில் அமர்ந்து பேசிவிட்டு சென்றுள்ளனர். எவ்வளவு விழாக்கள், இசை வெளியிட்டு விழா, ட்ரைலர் வெளியீடு, வெற்றிவிழா போன்ற பல விழாக்கள் இங்கு நடந்துள்ளது.
நம் பத்திரிகையாளர்கள் நண்பர்கள் பெண் பத்திரிக்கையாளர்களால் இருக்கும் இடத்தில் இது போல் பேசுவது நன்றாக இல்லை. அந்த இடத்தில் வந்து கெட்ட வார்த்தை பேசுவது., மேடை நாகரிகம் என்று இல்லையா? என்ன வேணும்னாலும் பேசுறதா? நிறைய புத்தகங்களை படித்து இருக்கேன் என சொல்லறீங்க, உலக படங்களை பார்த்து இருக்கேன் என சொல்லறீங்க, அப்பறோம் என்ன அறிவு இருக்கு உங்களுக்கு. குறைந்தபட்ச நாகரிகம் வேண்டாமா, ஒரு மேடையில் பேசும் பேச்சா இது.
உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு, எனக்கு ஒரு பெண் இருக்கு, மேடை நாகரிகம் என்பது மிகவும் முக்கியம். அனைவரையும் வாடா, போடா என அழைக்கிறாரு. இது இப்போ பேசணும்னு நான் நினைக்கல. மிஷ்கினின் பேச்சை தொடர்ந்து பல மேடைகளில் பார்த்து வருகிறேன்.
இயக்குநர் பாலாவை பார்த்து அவந்தா பாலா, இளையராஜாவை பார்த்து அவந்தா இளையராஜா சொல்றது, யாருடா நீ? நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டக்காரா தமிழ் சினிமா-ல?. உலக படங்களை பார்த்து காப்பியடித்து படம் பண்ணிய, ஒரு போலியான அறிவாளி தான் இயக்குநர் மிஸ்கின்". என நடிகர் அருள் தாஸ் பேசியுள்ளார்.